சென்னை மெரினா கடற்கரையில் 900 தள்ளு வண்டி கடைகளில் மாற்றுதிறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கக்கோரிய மனுவிற்கு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 47கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன. குறிப்பாக உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு 900 தள்ளு வண்டிகள் வழங்கும் சிறப்பு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மேலும், 900 தள்ளு வண்டி கடைகள் பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் குலுக்கலும் நடைபெற்றது.
இந்நிலையில், 900 தள்ளுவண்டி கடைகளில் மாற்று திறனாளிகளுக்கு உரிய ஒதுக்கீடு வழங்ககோரி தமிழ்நாடு மாற்றுதிறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சியை அணுகியபோது, இதுபோன்று எந்தவொரு ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என பதிலளித்தது.
Also read... டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள் அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது - நீதிமன்றம் கருத்து!
இதையடுத்து, மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, 900 தள்ளுவண்டி கடைகளில் 5 சதவீதத்தை மாற்றுதிறனாளிகளுக்கு வழங்க உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு மாற்றுதிறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்தமனுவில், மத்திய அரசின் சிறப்பு திட்டம் மற்றும் வளர்ச்சி திட்டங்களில்,
மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீதம் வழங்க வேண்டுமென மாற்றுதிறனாளிகள் உரிமைகள் சட்டம் தெரிவித்துள்ளதாகவும், அதனடிப்படையில் 900 தள்ளு வண்டி கடைகளில் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டு, தள்ளு வண்டி கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.