சாலை வியாபாரிகளின் பாதுகாப்புக்கு கொண்டு வரப்பட்ட சட்டம் முழுமையாக பின்பற்றபடுகிறதா? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சாலை வியாபாரிகளின் பாதுகாப்புக்கு கொண்டு வரப்பட்ட சட்டம் முழுமையாக பின்பற்றபடுகிறதா? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் சாலை வியாபாரிகளின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு 'சாலை வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் முறைபடுத்துதல்' சட்டம் கொண்டு வரப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் சாலை வியாபாரிகளின் பாதுகாப்புக்கு கொண்டு வரப்பட்ட சட்டம் முழுமையாக பின்பற்றபடுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சாலை வியாபாரிகளின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு 'சாலை வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் முறைபடுத்துதல்' சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், இடத்திற்கான உரிமம் வழங்குதல், சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாத்தல், வியாபாரிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து முறையிட ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்தல், காப்பீடு திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த சட்டம் இதுவரை அமல்படுத்தப் படவில்லை எனக் கூறி சாலை வியாபாரிகள் குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சிங்காரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த சட்டம் முழுமையான அமல்படுத்தப்படாததால் சாலை வியாபாரிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

Also read... நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன்? நீதிமன்றம் கேள்வி!

இந்த சட்டம் முழுமையான அமல்படுத்தப்படும் வரை சாலை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறபடுத்தவோ வியாபாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் 'சாலை வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் முறைபடுத்துதல்' சட்டத்தை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: