முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானது குறித்த விசாரணை நிலை என்ன? - நீதிமன்றம் கேள்வி!

புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானது குறித்த விசாரணை நிலை என்ன? - நீதிமன்றம் கேள்வி!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் உள்ள லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்ததாகவும், 2004ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவிற்கு பிறகு அந்த சிலை மாயமானதாகவும், அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைத்துள்ளது ஆகம விதிகளுக்கு எதிராக உள்ளதாக கூறி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானது குறித்த வழக்கின் புலன் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் உள்ள லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்ததாகவும், 2004ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவிற்கு பிறகு அந்த சிலை மாயமானதாகவும், அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைத்துள்ளது ஆகம விதிகளுக்கு எதிராக உள்ளதாக கூறி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கனவே உள்ள சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தவும், கோவில் முறையாக நிர்வகிப்பதை உறுதிசெய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுனர்கள், சட்டவல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மயில் சிலை காணாமல் போனதாக கூறப்படும் 2004-ம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான 2100 ஆவணங்கள் 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிலை மாயமானது தொடர்பாக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் ரங்கராஜன் தெரிவித்தார்.

மாயமான சிலை இன்னும் மீட்கப்படவில்லை என்றும், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிலை மாயமான விவகாரத்தில் உண்மை கண்டறியும் விசாரணை நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Also read... சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்!

அப்போது நீதிபதிகள், அசல் மயில் சிலை மாயமானது குறித்த விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்ததுடன், வாயில் மலரை கொண்டு அர்ச்சிக்கும் மயில் சிலையை புதிதாக வைக்க வேண்டுமென அரசுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் பழைய சிலை மாயமானது குறித்த புலன் விசாரணை மற்றும் உண்மை கண்டறியும் விசாரணையை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை அரசும், அறநிலையத்துறையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

First published:

Tags: Madras High court, Mylapore Temple