தமிழகத்தில் மீனவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட வலைகளின் விவரங்கள் என்ன? அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கோப்புப் படம்

பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் 'சுருக்கு மடி வலை' கொண்டு மீனவர்கள், மீன் பிடிக்க தடை விதித்து கடந்த 2000ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள், 'சுருக்கு மடி வலை'யை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்கக்கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் 'சுருக்கு மடி வலை' கொண்டு மீனவர்கள், மீன் பிடிக்க தடை விதித்து கடந்த 2000ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில், கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள், 'சுருக்கு மடி வலை'யை கொண்டு மீன் பிடிக்கலாம் என கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்திருந்தது.

நிபுணர் குழுவின் இந்த பரிந்துரையின்'படி கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 'சுருக்கு மடி வலை'யை கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்கக்கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆழ் கடலில் மட்டுமே பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் காணப்படும் போது, நாட்டுப்படகில் சென்று 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 'சுருக்கு மடி வலை' கொண்டு மீன் பிடிப்பதால் அவற்றுக்கு எந்த பாதிப்பும் வராது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

Also read... மாணவி மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டாரா? இல்லையா? - வழக்கில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

மேலும், இது குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக 'சுருக்கு மடி வலை'க்கு தடை விதிக்கப்பட்டதால் நாட்டுப்படகு கொண்டு மீன் பிடிக்கும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட வலைகளின் விவரங்களையும், அளவுக்கு அதிகமாக மீன்பிடிக்கப்படுவதை அரசு எப்படி கண்காணிக்கப் போகிறது என்பது குறித்தும், 5 வாரங்களுக்குள் பதில் மனுவாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: