புதுச்சேரியில் ஒரு நாளைக்கு 1,200 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைவது அபாயகரமானது - சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் தடுப்பூசி, ரெம்டெசிவிர், வெண்டிலேட்டர், படுக்கை ஆகியவற்றின் இருப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரியில் ஒரு நாளைக்கு 1,200 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைவது அபாயகரமானது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து விசாரிக்கும் வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், 3 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மூலம் 82 டன் கிடைப்பதாகவும், தேவை என்பது 20 டன்னாக இருப்பதால் பற்றாக்குறை இல்லை என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, சென்னையை விட சிறிய அளவிலான புதுச்சேரியில் நாளொன்றுக்கு 1200 பேர் என்ற அளவில் தொற்று பாதிப்புக்குள்ளாவது அபாயகரமானது என தெரிவித்தனர்.

Also read... நாட்டை உலுக்கும் கொரோனா இரண்டாம் அலை - கவலையுடன் எதிர்கொள்ளும் இந்தியர்கள்... ஆய்வில் தகவல்!

புதுச்சேரியில் தடுப்பூசி, ரெம்டெசிவிர், வெண்டிலேட்டர், படுக்கை ஆகியவற்றின் இருப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மதுபானம் மற்றும் சிகரெட் விற்பனைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில், கொரோனா பாதிப்பை இவை அதிகரிக்கும் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆய்வுகளோ அல்லது ஆதாரங்களோ இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கும் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: