வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

சென்னை உயர் நீதிமன்றம்

வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி மட்டும் இடம் பெற்றிருக்கும் எனவும், மொபைல் எண் இடம் பெறாது என்பதால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரியில் வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜக பிரச்சாரம் செய்வதாக அளித்த புகார் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள புதுச்சேரியில், பா.ஜ. கட்சி சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் ஆரம்பித்து பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி மட்டும் இடம் பெற்றிருக்கும் எனவும், மொபைல் எண் இடம் பெறாது என்பதால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் கட்சிகள் குறுந்தகவல் மூலம் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணையக் கோரி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும், ஆதார் விவரங்களைப் பெற்று பிரச்சாரம் செய்வது குறித்து சிறப்பு புலன் விசாரணை குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி முன் விசாரணைக்கு வந்தபோது, இதுசம்பந்தமாக மனுதாரர் அளித்த புகார் சைபர் குற்றப் பிரிவு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Also read... அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்குவதை தடை விதிக்க முடியாது - நீதிமன்றம்

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சி எப்படி வாக்காளர்களின் மொபைல் எண்களை பெற முடிந்தது எனவும், அதை எப்படி பயன்படுத்தலாம் எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரமும் உள்ள தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சி என்பதால் அமைதி காக்கிறதா எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக மார்ச் 26ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: