முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பள்ளிக்கு அருகில் மதுபான கடை - மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக்கு அருகில் மதுபான கடை - மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக்

டாஸ்மாக்

கோவையை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவை மாவட்டம் தென்னம்பாளையத்தில் பொது மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் திறக்கப்பட உள்ளதாக மனு அளித்திருந்தார்.

  • Last Updated :

பள்ளிக்கு அருகில் மதுபான கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது என அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவையை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவை மாவட்டம் தென்னம்பாளையத்தில் பொது மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் திறக்கப்பட உள்ளதாகவும், அந்த இடத்திற்கு 50 அடி தூரத்திலேயே பள்ளி அமைந்துள்ளதால், மதுக்கடை அமைக்க ஆட்சேபனை தெரிவித்து கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம்  அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Also read... மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பதற்றமான சூழல் - நடந்தது என்ன?

top videos

    இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

    First published:

    Tags: Madras High court