Home /News /tamil-nadu /

அன்னிய மரங்களை அகற்றும் விவகாரம்.. மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அன்னிய மரங்களை அகற்றும் விவகாரம்.. மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அந்நிய மரங்கள் அகற்றம்- நீதிமன்றம் உத்தரவு

அந்நிய மரங்கள் அகற்றம்- நீதிமன்றம் உத்தரவு

தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

  • News18
  • Last Updated :
 நூறு நாள் வேலை திட்டத்தில் அன்னிய மரங்களை அகற்றும் பணிகளை சேர்க்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும்  மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவதற்கு நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளித்த மத்திய அரசு,  அன்னிய மரங்களை அகற்றும் பணி, நூறுநாள் வேலை திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வு, நூறு நாள் வேலை திட்டத்தில் அன்னிய மரங்களை அகற்றும் பணிகளை சேர்க்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Also read... மகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தந்தைக்கு தூக்கு - உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை..

மேலும் நூறு நாள் வேலை திட்ட நிதியை அன்னிய மரங்களை அகற்ற பயன்படுத்த மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றும் பணியில் பழங்குடியினரை அமர்த்தவும் உத்தரவிட்டது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி