நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவு

கோப்பு படம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 112 கோடி ரூபாய் செலவில் பெரும்பள்ள ஓடையின் இரு புறமும் சுவர் எழுப்ப தடை கோரி, இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், அவற்றின் செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுத்து, இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 112 கோடி ரூபாய் செலவில் பெரும்பள்ள ஓடையின் இரு புறமும் சுவர் எழுப்ப தடை கோரி, இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், சுவர் எழுப்பினால் ஓடையின் அகலம் சுருங்கி, அதில் ஓடும் தண்ணீர் ஊருக்குள் புகுவதற்கான அபாயம் உள்ளது அச்சம் தெரிவித்துள்ளார்.

ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்புவது உயர் நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக உள்ளதால், அந்த கட்டுமானங்களை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டுமென்றும், ஓடையின் போக்கை மாற்றக்கூடாது என உத்தரவிட வேண்டுமென்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

Also read... வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தற்காலிக சட்டத்தை எதிர்த்து வழக்கு...!

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுத்து, மார்ச் 17ம் தேதிக்குள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது.

அந்த புகைப்படங்களின் தொகுப்பை தலைமைச் செயலாளருக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், பெரும்பள்ள ஓடையில் சுற்றுச்சுவர் கட்டுவதைப் பொறுத்தவரை, நீரோட்ட பாதையில் குறுக்கீடு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ள கூடாது எனவும், நீரோட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி, விசாரணையை தள்ளிவைத்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: