• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புதிய தலைமைச் செயலக வழக்கு - அரசின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

புதிய தலைமைச் செயலக வழக்கு - அரசின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

புதிய தலைமைச் செயலகம்

புதிய தலைமைச் செயலகம்

புதிய தலைமைச் செயலகத்தில் முறைகேடு என்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றிய அரசின் உத்தரவை ரத்து செய்ய திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதிய தலைமைச் செயலகத்தில் முறைகேடு என்று அதனை லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு மாற்றிய அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2006-11 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டது.

அதன் தலைவராக நீதிபதி ரகுபதி இருந்தபோது, அந்த ஆணையம் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, முன்னாள் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.

அந்த சம்மனை ரத்து செய்யக்கோரியும், ஆணையம் அமைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம்


அப்போது ஆணைய சம்மனுக்கும், விசாரணை நடைமுறைகளுக்கும் தடைவிதிக்கபட்டது. இந்த அண்டு (2018) அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆணையங்கள் அமைக்கப்படுவதும், அதற்கு மக்களின் பணம் வீணடிக்கப்படுவதாகவும் அதிருப்தி தெரிவித்தார். அப்போது ஆணையத்தை நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் கருணாநிதி ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானதையடுத்து, அவர் வழக்கு மட்டும் முடிக்கபட்ட நிலையில், ஆணையத்தை எதிர்த்த தங்கள் வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஸ்டாலின், துரைமுருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவற்றை ஏற்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விசாரணை ஆணையம் என்பதே கண் துடைப்பு நாடகம் என்று கருத்து தெரிவித்ததுடன், ஆணையம் திரட்டிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை தமிழக அரசு பரிசீலித்து குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் குற்றவியல் விசாரணை நடத்தலாம் என பரிந்துரைத்தார்.

மு.க ஸ்டாலின்


நீதிபதி பரிந்துரையின் அடிப்படையில், அவரது உத்தரவின் அடிப்படையில் புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பாக நீதிபதி ரகுபதி ஆணையம் விசாரித்த மற்றும் திரட்டிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புதுறைக்கு மாற்றி 2018 செப்டம்பர் 24-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர்.

அந்த வழக்குகள் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பரிந்துரைப்படி ஆவணங்களை தமிழக அரசு முறையாக பரிசீலிக்காமல் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அவசரகதியில் மாற்றியுள்ளதாக இருவர் தரப்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கவும், அந்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்டு 3ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆணையம் திரட்டிய ஆவணங்களை ஆராய்ந்தபோது, புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டதில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கட்டிட முறைகேட்டில் 629 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எளிதில் விட்டுவிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: