• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா ஊரடங்கு காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நிறுத்தப்பட்ட விழாக்கள் நடத்தப்படும் - இந்து சமய அறநிலைய துறை தகவல்!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நிறுத்தப்பட்ட விழாக்கள் நடத்தப்படும் - இந்து சமய அறநிலைய துறை தகவல்!

கோப்பு படம்

கோப்பு படம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது குறித்து, மத தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா ஊரடங்கு காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நிறுத்தப்பட்ட ஐந்து விழாக்களை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைய துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது குறித்து, மத தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்க உள்ள விழாக்கள், பண்டிகைகள் எப்படி நடத்துவது என்பது குறித்து, மத தலைவர்களுடன் கலந்து பேசி, அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கூட்டம் நடத்தப்படாதது குறித்து கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், கூட்டத்தை கூட்டி முடிவை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தனர்.

Also read... உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்றன? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி 22ம் தேதி அதிகாரிகள், மத தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட ஐந்து விழாக்களை நடத்த முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இந்து சமய அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், விழாக்களை கோவில் மரபுகளின்படியும், ஆகம விதிகளின்படியும் விரைந்து நடத்த கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: