ஆளுனர் அளித்த நிதி தெரு விலங்குகளின் ஆரம்பகட்ட உணவிற்கு உதவி புரிந்துள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்!

நாய் (கோப்பு படம்)

தெரு நாய்கள், விலங்குகளுக்கு உணவளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு மாவட்ட ரீதியாக ஒதுக்கியுள்ள தொகையைில் சில மாவட்டங்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது போதுமானதல்ல என்றும் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆளுனர் அளித்த 10 லட்ச ரூபாய் நிதி தெரு விலங்குகளின் ஆரம்பகட்ட உணவிற்கு உதவி புரிந்துள்ளதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் வாயில்லா பிராணிகளுக்கும் உணவு கிடைக்க தனியார் நிறுவனங்கள் முன் வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்க கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 9 லட்சம் ரூபாயை விடுவித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெரு நாய்கள், விலங்குகளுக்கு உணவளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு மாவட்ட ரீதியாக ஒதுக்கியுள்ள தொகையைில் சில மாவட்டங்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது போதுமானதல்ல என்றும் தெரிவித்தார்.

Also read... சேலம் மாவட்டத்தில் கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்காத விவகாரம் - அரசு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு!

இதையடுத்து, தெரு நாய்கள், விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக அரசு நிதி ஒதுக்கும் முன், 10 லட்சம் ரூபாயை ஆளுனர் ஒதுக்கீடு செய்ததாகத் தெரிவித்த நீதிபதிகள், கொரோனா ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவிக்கும் வாயில்லா பிராணிகளுக்கு உணவளிக்க நிதியுதவியோ, பொருளுதவியோ வழங்க தனியார் நிறுவனங்கள் முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 9 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: