கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து ஆகுமா? மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்புக்களின் இறுதி பருவத் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய - மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானிய குழுவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து ஆகுமா? மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கோப்பு படம்
  • Share this:
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புக்கள் உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான இறுதிப்பருவத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பள்ளி, கல்லூரிகள் கொரோனா தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளதால், இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பு செப்டம்பர் மாதம் தான் தணியும் எனவும், பள்ளி, கல்லூரிகள் 2021 ம் ஆண்டு ஜனவரி தான் திறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால் அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகி விடும் என்பதால், இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.


தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதாலும் தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்பதாலும், இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்து, ஹால் டிக்கெட் பெற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் எனவும் இறுதி பருவத் தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also read... ஆன்லைன் வகுப்புகள் நடத்த புதிய வழிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் இதுகுறித்து விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளும், பல்கலைக்கழக மானியக் குழுவும் உத்தரவிட்டது.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading