• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேரிடராக அறிவிக்க கோரிக்கை - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

பேரிடராக அறிவிக்க கோரிக்கை - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

புயலில் பலியானவர்களுக்கு நிவாரணத்தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

    கஜ புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும், நிவாரண உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    புயலில் பலியானவர்களுக்கு நிவாரணத்தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    பிற்பகலில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பேரிடராக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், நிவாரணப்பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், 4 மாவட்ட ஆட்சியர்கள் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்தனர்.

    Also See..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: