கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்துவது குறித்து மாவட்ட நீதிபதிகள் முடிவெடுக்க அனுமதி!

கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்துவது குறித்து மாவட்ட நீதிபதிகள் முடிவெடுக்க அனுமதி!

சென்னை உயர்நீதிமன்றம்.

கீழமை நீதிமன்ற வளாகங்களில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள், அறைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்து பிப்ரவரி 8ஆம் தேதியிலிருந்து மூன்று வாரம் கழித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் முழுமையாக நேரடி விசாரணை நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட நீதிபதிகள் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொரோனா தாக்கம் குறித்து ஆய்வு செய்த சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக குழு, கீழமை நீதிமன்றங்கள் அனைத்தும் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் முழு அளவில் செயல்படலாம் என முடிவெடுத்து அறிவித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நேடியாக நடத்துவதா அல்லது காணொலி மூலமாக நடத்துவதா என்பதை அந்தந்த மாவட்டத்தில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு மாவட்ட முதன்மை நீதிபதிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்றும், அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கீழமை நீதிமன்றங்கள் செயல்படுவதை முதன்மை நீதிபதிகளும், மாவட்ட நீதிபதிகளும் உறுதி செய்ய வேண்டுமென தலைமை பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read... ஆதாரம் இல்லாமல் ஏன் பேசுகிறார் உதயநிதி? அவருக்கு அட்வைஸ் பண்ணுங்க... வக்கீலுக்கு நீதிமன்றம் உத்தரவு

கீழமை நீதிமன்ற வளாகங்களில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள், அறைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்து பிப்ரவரி 8ஆம் தேதியிலிருந்து மூன்று வாரம் கழித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: