வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்: நீதிமன்றம் அறிவுறுத்தல்!

வாக்காளர் பட்டியல் (கோப்புப் படம்)

வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவை முடித்து உத்தரவிட்டனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 45 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த இளந்தமிழன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

  இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

  அப்போது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மக்களவைத் தேர்தலுக்கு முன் 7 முறை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெறவில்லை என எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

  மேலும், 2016 மற்றும் 2019-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை ஒப்பிடுகையில், மனுதாரர் குறிப்பிட்ட கடலோர பகுதியில் 2,138 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் உரிய ஆவணத்துடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதனையடுத்து, வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவை முடித்து உத்தரவிட்டனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: