பொதுமக்கள் நலன் கருதி தொற்று பரவல் தணியும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் - நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சென்னை உயர் நீதிமன்றம்

கொரோனா இரண்டாவது அலை பரவல் தடுப்புக்கான புதிதாக விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பொதுமக்கள் நலன் கருதி, தொற்று பரவல் தணியும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, கொரோனா இரண்டாவது அலை பரவல் தடுப்புக்கான புதிதாக விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக சீனா மற்றும் பிரிட்டன் மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Also read... தண்ணீர் பிடிப்பதில் தகராறு... திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை - இருவர் கைது!

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே விமான பயணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது அலை தணிந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, கொரோனா தொற்று பரவல் தணியும் வரை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பொது நலனை கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: