ஓசூர் இடைத்தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பிரசாரம் செய்ய தடை கேட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்தது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஓசூர் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் வாகனங்கள் மற்றும் பொது சொத்துக்கள் சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனை தற்போது உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஓசூர் தொகுதியில் அவருடைய மனைவி ஜோதி போட்டியிடுகிறார்.
ஜோதிக்கு ஆதரவாக பாலகிருஷ்ணா ரெட்டி பிரசாரத்தில் ஈடுபட தடை கேட்டு அமமுக வேட்பாளர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அவசர வழக்காக நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் பாலகிருஷ்ண ரெட்டி தன்னை வேட்பாளர் போல காட்டி கொள்வதாகவும், இதன் காரணமாக வேட்பாளர் யார் என்பதில் மக்களிடையே குழப்பம் ஏற்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாலகிருஷ்ணா ரெட்டி தனது மனைவியுடன் பிரசாரம் மேற்கொண்ட புகைப்பட ஆதரங்களும் தாக்கல் செய்யப்பட்டது.
மனைவியுடன் கணவர் இருப்பது எந்த வகையில் குற்றமாகும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை நாளை ஒத்திவைத்தனர்.
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.