Home /News /tamil-nadu /

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு!

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு!

பப்ஜி மதன்

பப்ஜி மதன்

டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக , பப்ஜி மதன், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால், கடந்த ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு மீது தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக , பப்ஜி மதன், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால், கடந்த ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்டார்.

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு எதிராக ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி என அறிவித்து, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்த ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பப்ஜி மதன் என்கிற மதன் குமார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Also read... நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பப்ஜி மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 8 மாதங்களாக சிறையில் இருப்பதால், மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், சமூக வளைதளங்களில் ஆபாசமாக பேசுவது மிகவும் ஆபத்தானது. அதனால் தற்போது இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து, வழக்கை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி