மோசடி வழக்கில் இயக்குனர் தாக்கல் செய்த முன் ஜாமின் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!

மோசடி வழக்கில் இயக்குனர் தாக்கல் செய்த முன் ஜாமின் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!

கோப்புப் படம்

மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாக சக்தி சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பண மோசடி வழக்கில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமின் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 24ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

  பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம், சினிமா பாரடைஸ் என்ற பெயரில் திரைப்பட வினியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

  கடந்த 2010ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளியான காவலன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெறுவதற்காக, சென்னை அடையாரைச் சேர்ந்த சுந்தர் என்பவரிடம் 23 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார்.

  ஒரு லட்சம் ரூபாய் வட்டி சேர்த்து 24 லட்சம் ரூபாயாக மூன்று மாதங்களில் திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்தும், பணத்தை திருப்பி தரவில்லை என்றும், பணத்தை திருப்பி கேட்ட போது, தனக்கும் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்ததாக கூறி, விருகம்பாக்கம் போலீசில் சுந்தர் புகார் அளித்திருந்தார்.

  பின் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த புகாரின் அடிப்படையில், சக்தி சிதம்பரம் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி சக்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

  Also read... நொளம்பூரில் மழைநீர் வடிகாலை மூடாததால் தாய் - மகள் விபத்துக்குள்ளாகி பலியான விவகாரம் - புகார் மனு மீது முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

  இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாக சக்தி சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால், அவகாசம் வழங்க வேண்டும் என புகார்தாரர் சுந்தர் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: