• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது

நாட்டுக்காக வீர மரணம் அடைந்த பழனிக்கு வானதிதேவி (35) என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனர்.

  • Share this:
    சீனாவுடன் கடந்த ஆண்டு நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் ஹவில்தார் பழனிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வீர் சக்ரா விருதை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.

    கடந்த ஆண்டு ஜூலை 16-தேதி இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் ஹவில்தார் கே. பழனி வீர மரணம் அடைந்தார்.

    இதுதொடர்பாக அன்று ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, பழனியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சமும், ஒருவருக்க அரசு வேலையும் அளிக்கப்படும் என்று அறிவித்தது. தொடர்ச்சியாக அவருக்கு வீர் சக்ரா விருது அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பழனிக்கு வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. இதனை அவர் சார்பாக அவரது மனைவி வானதி தேவி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றுக் கொண்டார்.



    நாட்டுக்காக வீர மரணம் அடைந்த பழனிக்கு வானதிதேவி (35) என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: