HOME»NEWS»TAMIL-NADU»has tamilnadu got lose its investment skd

தொழில் தொடங்க சாதகமான பட்டியலில் ஆந்திரா முதலிடம் - தமிழகத்துக்கு முதலீடுகள் வருவது பாதிக்கப்படுமா?

தொழில் துவங்க சாதகமான பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளதால், தமிழகத்திற்கு வரும் முதலீடுகள் மேலும் பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது.

தொழில் தொடங்க சாதகமான பட்டியலில் ஆந்திரா முதலிடம் - தமிழகத்துக்கு முதலீடுகள் வருவது பாதிக்கப்படுமா?
கோப்புப்படம்
  • Share this:

தொழில் துவங்க மிகவும் சாதகமான மாநிலங்கள் பட்டியலை 2015 முதல் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு அம்சங்களின் கீழ் மாநிலங்கள் பட்டியலிடப்படுகின்றன. இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான பட்டியலில் ஆந்திர மாநிலத்திற்கு முதல் இடம் கிடைத்தது.

இந்த பட்டியல், தொழில் செய்ய நிலம் கிடைக்கும் தன்மை, கட்டுமான அனுமதி, தொழிலாளர் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு கணிக்கப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு 14வது இடம் தான் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் தொழில் துவங்க அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருப்பதே இதற்கு காரணம் என தெரிகிறது. குறிப்பாக ஒற்றைச்சாளர முறையில் 30 நாட்களில் தொழில் துவங்க, துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தேவை தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்குள் அந்நிய முதலீடுகள் வருவதில் தமிழகம் 6வது இடத்தில் இருக்கிறது. கடந்த அக்டோபர் முதல் மார்ச் வரையிலான 6 மாதத்தில் தமிழகத்திற்குள் 7,230 கோடி ரூபாய் அந்திய முதலீடு வந்துள்ளது. இதில் 52,073 கோடி ரூபாய் அந்திய முதலீட்டுடன் மகாராஸ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகா, 6 மாதத்தில் 30,746 கோடி ரூபாயை ஈர்த்துள்ளது.




இந்நிலையில், தமிழகத்தில் எவ்வளவோ தொழில்பேட்டைகள் இருந்தும், தமிழக, ஆந்திர எல்லையில் இருக்கும் ஸ்ரீசிட்டி போன்ற பகுதிக்கு செல்வது தமிழகத்தின் முதலீட்டு சூழ்நிலையை பாதிப்பதாக கருத்து முன் வைக்கப்படுகிறது. தற்போது தொழில் செய்ய ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் ஆந்திர வந்திருப்பது, தமிழகத்தின் அந்நிய முதலீடுகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. நேரடியாக இல்லாமல், ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கப்பட்டால் தொழில் செய்ய சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முன்னிலைக்கு வரும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
Published by:Karthick S
First published: