Home /News /tamil-nadu /

தமிழக பா.ஜ.கவில் நிர்வாகிகள் மாற்றம்.. நாளை அறிவிப்பு

தமிழக பா.ஜ.கவில் நிர்வாகிகள் மாற்றம்.. நாளை அறிவிப்பு

பா.ஜ.க

பா.ஜ.க

தமிழக பா.ஜ.கவுக்கு புதிய நிர்வாகிகள் பட்டியல் நாளை வெளியாகவுள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

    பா.ஜ.க தொடங்கப்பட்ட 42-வது ஆண்டு நிறுவன தினம் நாடு முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அனைத்துமாநில பா.ஜ.க தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின்போது 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியைத் தயார்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தநிலையில், தமிழக பா.ஜ.கவில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

    இலங்கையில் அனைவருக்கும் உதவ தமிழக முதல்வருக்கு கோரிக்கை: ரவிக்குமார் எம்.பி. கண்டனம்

    மாநிலத் தலைவர் அண்ணாமலை பதவியைத் தவிர்த்து துணைத் தலைவர், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் பொறுப்புகள் பெருமளவில் மாற்றப்படும் என்று செய்திகள் செய்திகள் வெளிவந்துள்ளன. நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக டெல்லியில் அண்ணாமலை ஒப்புதல் பெற்றுள்ளார். நிர்வாகிகள் மாற்றம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Annamalai, BJP

    அடுத்த செய்தி