அணில்களால் மின்தடை ஏற்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய விளக்கம் உண்மையா?

மின்கம்பத்தில் அணில்

தமிழ்நாட்டில் ஏற்படும் மின்தடைக்கு அணில்கள் ஒரு காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்துவருகின்றனர்.

 • Share this:
  தமிழகத்தில் தற்போது ஏற்படும் மின்தடைக்கு அணில்களும் காரணமென கூறியதால், அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். உண்மையில் மி்ன்தடைக்கு அணில்கள் முக்கிய காரணமாக அமைகிறாதா என்பதைத் தெரிந்துகொள்வோம்.

  மின்தடை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி, பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் மின்கம்பிகளில் ஓடும் அணில்களால் மின் தடை ஏற்படுவதாக கூறினார். இதனை குறிப்பிட்டு அமைச்சரை விமர்சித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் கிண்டலடித்து இருந்தார்.

  இதற்கு விளக்கமளித்த செந்தில்பாலாஜி, அணில்களால் ஏற்படும் மின்தடை உலகளவில் மின்வாரியங்கள் எதிர்கொள்ளும் பெரும் சவால்களில் ஒன்று என்பதை ஆராய்ந்து பார்த்தால் அறிய முடியும் என்றார்.

  இந்நிலையில், கடந்தாண்டு அமெரிக்காவில் விலங்குகளால் ஏற்பட்ட மின்தடை தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. அதன்படி, இரண்டாயிரத்திற்கு அதிகமான விலங்கினங்களால் 22 அயிரத்திற்கும் அதிகமான முறை மின் தடை ஏற்பட்டுளது. ஆச்சரியமூட்டும் விதமாக, இதில் அதிகபட்ச மின்தடைக்கு காரணமாக, அணில்கள் முதலிடத்தை பிடித்துள்ளன. அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும், அமெரிக்காவில் அணில்களால் 15 ஆயிரம் முறை மின் தடை ஏற்பட்டுள்ளது. புயல் போன்ற இயற்கை பேரிடர்களை காட்டிலும், அதிக மின் தடையை அணில்கள் ஏற்படுத்தியுள்ளன.

  மின் இணைப்புகளுக்கு அருகே மண்ணிற்கு அடியில் வளைகளை தோண்டுவது, மின் கடத்திகளை மென்று விடுவது மற்றும் மின்கம்பிகளின் மீது ஓடும்போது இரண்டு கம்பிகளுக்கு இடையே உராய்வை ஏற்படுத்துவதன் மூலம், அணில்கள் மின் தடைக்கு காரணமாவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  பொதுவாக, மின்கம்பியின் மீது ஓடும்போது அணில்களின் கால்களுக்கு இடைபட்ட பகுதியில் பாயும் மின்சாரத்தில், வோல்டேஜ் விகிதம் மாறாததால் அது அணில்களின் உடலில் பெரிய மற்றத்தை ஏற்படுத்துவதில்லை. மேலும், கால்கள் வழியாக உடலில் மின்சாரம் பாயாத அளவிற்கு, அவை அதிக தடுப்புத் திறனையும் பெற்றுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதே சமயம், உடலில் மின்கம்பிகள் நேரடியாக் உரசும்போது, அவை உயிரிழந்து விடுகின்றன. உதாரணமாக அமெரிக்கவின் ஓக்லஹோமாவின் வேகனரில், மண்னுக்கு அடியில் இருந்த மின்கம்பியில் அணில் சிக்கி உயிரிழந்ததால், 5 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. அணில்களால் மின் தடை ஏற்படும் என்பதே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாகும்.
  Published by:Karthick S
  First published: