மதுரை ஆதினத்துக்கு நித்தியானந்தா உரிமை கோர முடியுமா?

மதுரை ஆதீனம் - நித்யானந்தா

மதுரை ஆதினத்துக்கு சட்டப்படி நித்தியானந்தா உரிமை கோர முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

 • Share this:
  மதுரை ஆதீன மடம் தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இன்று வரை 292 பேர் பீடாதிபதியாக பொறுப்பு வகித்துள்ளனர். 292 ஆவது பீடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (அருணகிரி) என்பவர் ஆதீனமாக பொறுப்பேற்றார். 77 வயதான இவர் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக இருந்துவந்தார்.

  இவர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று காலை முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடம் ஆனதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவிந்திருந்தது. இந்நிலையில், இன்று இரவு சிகிச்சை பலனின்றி மதுரை ஆதினம் காலமானார். அதனையடுத்து, அடுத்த ஆதினம் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  இதற்கிடையில், மதுரை ஆதினமாக இருந்த அருணகிரிநாதர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே நித்தியானந்தா மதுரை ஆதினத்துக்கு உரிமை கோரினார். அவர் வெளியிட்ட பதிவில், ‘மதுரை ஆதீனத்தின் 292வது குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் விைரவில் உடல் நலம்பெற பிரார்த்தைன செய்யுங்கள். ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் மற்றும் அதிகாரங்களை தான் பெற்றுள்ளதாகவும், ஆன்மீக மற்றும் மத ரீதியான சடங்குகள், பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் தமக்கு உள்ளது. மேலும், தன்னை அவர் மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கிடையில், இளைய ஆதினமாக நித்தியானந்தா உரிமை கோர முடியாது என்று தெரிகிறது. மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர், நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து, ஆதின விதி மீறி நித்யானந்தா நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது இளைய ஆதின பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது ஒரு கட்டத்தில், நீதிபதி உத்தரவின் பேரில் மதுரை இளைய ஆதீனமாக நான் உரிமை கோர மாட்டேன் என்று நித்யானந்தா பிரமாணப் பத்திரம் எழுதி உயர் நீதிமன்றத்தில் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Karthick S
  First published: