மக்கள் பாதை அமைப்பின் பொதுக்கூட்டம்: இன்று அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறாரா சகாயம்

மக்கள் பாதை அமைப்பின் பொதுக்கூட்டம்: இன்று அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறாரா சகாயம்

சகாயத்துக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்

மக்கள் பாதை அமைப்பின் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளநிலையில் அரசியல் வருகை குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
சென்னை ஆதாம்பாக்கம் பகுதியில் இன்று மக்கள் பாதை சார்பில்  "அரசியல் களம் காண்போம்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என யார் நினைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று சகாயம் மேடையில் பேசும்போது தனது அரசியல் நிலைப்பாடு குறித்த கருத்தை பகிர்ந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நேர்மையான நபர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கும் இளைஞர்கள் குறிப்பாக சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் இருக்கும் நபர்கள் அவரின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

கிரானைட் முறைகேடு, மணல் முறைகேடு, பெப்சி கம்பெனி நடவடிக்கை என பல ஆபத்தான நிலையில் அவருக்கு ஆதரவாக பல இளைஞர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே தற்போது அவர் ஐ.ஏ எஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு எப்போது அரசியல் அறிவிப்பு வரும் என காத்திருந்தனர். அநேகமாக இன்று அதற்கான சூழல் உண்டாகும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என பெயரெடுத்தவர் சாகாயம். புதுக்கோட்டையை சேர்ந்த இவர், முதலில் தமிழக அரசின் சிறிய துறைகளில் பணியாற்றி, பின்னர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் பணிக்கு தேர்வானவர். இவர் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். தனது நேர்மையின் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்த அவர், சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார்.

மேலும் தனது விருப்ப ஓய்வு குறித்து கருத்து பேசிய அவர், நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்து பேசவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தனது ஜனவரி 31-ம் தேதி காந்தி மறைந்த தினத்தில் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த்தாகவும், இந்த கோரிக்கையை அரசு நிராகரித்தது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் பாதை அமைப்பின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் பண்டிகையில் சகாயம் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். அங்கு நடைபெற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்த சகாயம் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ’சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மக்கள் பாதை அமைப்பின் இளைஞர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என தெரிவித்தார். மேலும் தான் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் தனிப்பட்ட காரணங்களுக்காவே தான் ஓய்வு பெற்றதாகவும், விரைவில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: