Fact Check: தமிழக மக்களிடம் தங்க நகைகளைக் கேட்டாரா பா.ஜ.க தலைவர் முருகன்?

எல்.முருகன்

  • Share this:
    கொரோனா நிவாரணத்துக்காக தமிழக மக்கள், தங்களது தங்க நகைகளைத் தர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க முருகன் கூறியதாக செய்திகள் பரவிய நிலையில், போலியான செய்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் பெரும் அச்சமாக இருந்துவருகிறது. அதன்தொடர்ச்சியாக, கொரோனா நிவாரணத்துக்காக தமிழக மக்கள், தங்க நகைகளைத் தரவேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் கூறியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

    செய்தி தொலைக்காட்சி இணையதள கார்டு வடிவில், ‘தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று பா.ஜ.க தலைவர் முருகன் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த கார்டு சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவிய நிலையில், பலரும் பா.ஜ.கவைக் கடுமையாகச் சாடினர். அதனையடுத்து, பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தங்கள் கட்சி மீது வெறுப்பும், கோபமும் வரும் வகையில் இதுபோன்று சிலர் செயல்படுவதாக பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

     

    Also see:
    Published by:Karthick S
    First published: