• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "பொதுக்கூட்டத்திற்கு இவ்வளவு பேர் வந்ததே மகிழ்ச்சி" - பொன்.ராதாகிருஷ்ணன்

"பொதுக்கூட்டத்திற்கு இவ்வளவு பேர் வந்ததே மகிழ்ச்சி" - பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது காலியான இருக்கைகள்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது காலியான இருக்கைகள்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாஜக சார்பில் திருச்சியில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியபோது, தொண்டர்கள் இல்லாமல், இருக்கைகள் காலியாக இருந்தது பாஜக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தையொட்டி, பாஜக-வின் தொழிலாளர் பிரிவு சார்பில் திருச்சியில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழிசை சவுந்தரராஜன்  பேசிக் கொண்டிருந்தபோது, தொண்டர்கள் கூட்டம் இருந்தது.

    பாஜக நடத்திய கூட்டத்தில் காலியாக இருந்த இருக்கைகள்


    ஆனால், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தது. எனினும் கூட்டத்தில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் தொழிலாளர் பிரிவு சார்பில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

    மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது காலியான இருக்கைகள்


    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-வது கட்டமாக நகர்ப்பகுதிகளுக்கு 631.98 கோடி ரூபாயையும், கிராமப்புறங்களுக்கு 758.6 கோடி ரூபாயையும் மத்திய அரசு நேற்று நிதி வழங்கியுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக-வின் பலம் அதிகரித்து வருவதாக தலைவர்கள் பேசிவரும் நிலையில், மத்திய அமைச்சர் பேசியபோது இருக்கைகள் காலியாக இருந்த சம்பவம் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: