Home /News /tamil-nadu /

கோவை மாநகராட்சியில் "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி... உற்சாகமுடன் கொண்டாடிய பொதுமக்கள்

கோவை மாநகராட்சியில் "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி... உற்சாகமுடன் கொண்டாடிய பொதுமக்கள்

ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்

ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்

கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வு சில வருடம் காலம் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் துவங்கப்பட்டிருக்கின்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை மாநகராட்சி மற்றும் காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்"   நிகழ்ச்சியில் சைக்கிள் ஓட்டியும், பலூனுக்கு காற்றடித்தும், யோகா, கராத்தே பயிற்சி செய்தும், பறை இசைத்தும் உற்சாகமாக நடனமாடியும் பொது மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கோவை மாநகராட்சியில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. ஆர்.எஸ். புரம் திவான் பகதூர் சாலையில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகள் பங்கேற்றனர். காலை 6 மணி முதல் ஒன்பது மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ,கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ,மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஆகியோர் சைக்கிள் ஒட்டியபடி வந்து பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சாலையில் யோகா, ஜூம்பா, ஏரோபிக்ஸ் போன்ற  உடற்பயிற்சிகளும், மட்டைப்பந்து, கூடைப்பந்து வில்வித்தை போன்ற போட்டிகளும், பறையாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பறைஇசைக்கு குழந்தைகளும், இளைஞர்களும் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும் குழந்தைகளுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. சைக்கிள் பம்ப் மூலம் பலூன்களுக்கு காற்றடித்தல் , லெமன் ஸ்பூன் உள்ளிட்ட விளையாட்டுகளும்,  சைக்கிள் டயரை உருட்டி விளையாடும் விளையாட்டுக்களும் நடத்தப்பட்டது. கராத்தே  , கிரிக்கெட், ஸ்கேட்டிங் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட்டது. கோவை மாநகராட்சி பெண் கவுன்சிலர்களும்  லெமன் ஸ்பூன், சைக்கிள் டயர் ஓட்டுதல், சாக்கு பை ஓட்டம் போன்ற விளையாட்டுகளில்  பங்கேற்று பொது மக்களை உற்சாகப்படுத்தினர்.

    ALSO READ | தென்காசி தீண்டாமை கொடுமை: கைதானவர்களை ஊரைவிட்டு வெளியேற்ற முடிவு... முக்கிய சட்டப்பிரிவைப் பயன்படுத்தப் போவதாக தகவல்

    மேலும் சாலையில் பெண் கவுன்சிலர்கள் இணைந்து கோலமிட்டனர். சமூக வாழ்வின் அவசியத்தையும், இயற்கையோடு இணைந்து  வாழ்வதன் அவசியத்தையும், உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும் ஒன்று சேர வலியுறுத்துவதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம்  இந்த ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்வை நடத்துகின்றனர்.  ஏற்கனவே கடந்த 2017 ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வு சில வருடம் காலம் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் துவங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் : சு.குருசாமி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி