Home /News /tamil-nadu /

உதய் உடன் வெளியே சென்றால் அண்ணன், தம்பியா என கேட்பார்கள்.. உடற்பயிற்சிதான் காரணம் - மு.க.ஸ்டாலின்

உதய் உடன் வெளியே சென்றால் அண்ணன், தம்பியா என கேட்பார்கள்.. உடற்பயிற்சிதான் காரணம் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

MK Stalin and Udhayanithi : எனக்கு கிட்டத்தட்ட 70 வயது ஆகிறது. ஆனால், பார்த்தால் அப்படி தெரியாது. நானும் என் மகனும் வெளிநாடுகளில் வெளியே சென்றால் அண்ணன், தம்பியா என கேட்பார்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    சென்னை அண்ணாநகரில் நடத்தப்பட்ட Happy streets நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    டைம்ஸ் ஆஃப் இந்தியா, சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை பெருநகர காவல்துறை இணைந்து ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை அண்ணா நகரில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக  பங்கெடுத்தனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இந்த நிகழ்வில் பங்கெடுத்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான் 2, 3 நாட்களில் குணமடைந்துவிட்டேன். அதற்கு காரணம் என் உடல்தான். எனக்கு கிட்டத்தட்ட 70 வயது ஆகிறது. ஆனால், பார்த்தால் அப்படி தெரியாது. நானும் என் மகனும் வெளிநாடுகளில் வெளியே சென்றால் அண்ணன், தம்பியா என கேட்பார்கள். அந்த மாதிரி என் உடல்நலத்தை பேணி பாதுகாக்கிறேன்.

    இதையும் படிங்க: விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்... பரந்தூர் மக்களுக்கு கூடுதல் இழப்பீடு- அமைச்சர் தங்கம் தென்னரசு

    வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. அதற்காக சாப்பிடாமலும் இருக்க கூடாது. என்ன சாப்பிட்டாலும் உடற்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும்.  ஜிம், யோகா, நடைபயிற்சி ஆகியவற்றை செய்கிறேன். உடல்நலத்தை பேணி பாதுகாத்து வந்தால் எந்த கவலை, டென்சன் வந்தாலும் அதில் இருந்து விடுபடலாம். எனவே, நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி செய்யுங்கள் ‘ என பேசினார். முன்னதாக அங்கிருந்தவர்களுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின், இறகு பந்து விளையாடி உற்சாகப்படுத்தினார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி