Home /News /tamil-nadu /

நடிகர் வடிவேலு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நடிகர் வடிவேலு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வடிவேலு

வடிவேலு

கடந்த 23ம் தேதி லண்டனிலிருந்து விமானம் மூலம் வந்த வடிவேலுவுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் வடிவேலு குறித்து, மகிழ்ச்சியான தகவலை மருத்துவமனை நிர்வாகம் பகிர்ந்துள்ளது.

    நடிகர் வடிவேலு லண்டனிலிருந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து கடந்த வாரம் சென்னை திரும்பியிருந்தார்.

    ஒமைக்ரான் பரவல் அதிகமுள்ள பிரிட்டன் நாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் விதிகள் படி பரிசோதனை செய்ய வேண்டும். அதன்படி, கடந்த 23ம் தேதி விமானம் மூலம் வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதையும் படிங்க : ஒமைக்ரானை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு போடலாம் - மத்திய அரசு

    பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்படும் போது அவருக்கு தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை.

    இதையும் படிங்க : ஏலியன்கள் பூமிக்கு வருவார்கள்.. 2022ல் இந்தியாவில் என்னென்ன நடக்கும் - பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்

    இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை பலனளிப்பதாகவும் அவர் நல்ல முறையில் உடல் நலம் தேறி வருவதாகவும் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : ''நடிகை கரீனா கபூரின் மகன் பெயர் என்ன?'' பள்ளி மாணவர்களின் பொது அறிவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vadivelu, Tamil Cinema

    அடுத்த செய்தி