ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிறந்தது 2023 ! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!!

பிறந்தது 2023 ! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!!

புத்தாண்டு வாழ்த்துகள்

புத்தாண்டு வாழ்த்துகள்

Happy New Year 2023 | வாசகர்கள் அனைவருக்கும் நியூஸ்18 தமிழ் இணையதளம் சார்பாக 2023 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெறும் காலண்டர் மாறுதலாக மட்டும் அல்லாமல், நாடு, மொழி, கலாசாரம் கடந்து புதிய ஆண்டை வரவேற்பதில் மனிதர்கள் நாம் அத்தனை உற்சாகம் கொள்கிறோம். அவரவருக்கு வாழ்வியல் இலக்கு. அதையொட்டிய திட்டமிடல். இன்னல்களுக்கிடையே தொடர் ஓட்டம். இன்புறும் தருணங்களில் உற்றார் உறவினரோடு கொண்டாட்டம் என ஆண்டின் 12 மாதங்களையும் கடத்திக்கொண்டே இருக்கிறோம். கொரோனா பெருந்தொற்றால், கட்டுப்பாடுகளும், பாதுகாப்பும் நிறைந்த கடந்த காலங்களை நினைவில் ஏந்தி, சுகாதாரம், நிதி மேலாண்மையில் அக்கறைக்கொண்டு, இன்னும் அதிகமாக சக மனிதர்களிடம் அன்பு பாராட்டி புதிய ஆண்டில் நடைபோடுவோம். ஆம், நாம் இப்போது 2023-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதுபோல், இனி உலக மக்கள் நலமோடும், வளமோடும் வாழ நல்வழி பிறக்கட்டும். அன்பும், மகிழ்ச்சியும் இன்னும் இன்னும் பெருகட்டும். வாசகர்கள் அனைவருக்கும் நியூஸ்18 தமிழ் இணையதளம் சார்பாக 2023 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

First published:

Tags: New Year 2023