ஆலயங்களில் வழிபாடுகள், கடற்கரை ஆட்டங்கள், மது விடுதிகளில் கொண்டாட்டம் என விதவிதமான கொண்டாட்டங்களின் நடுவே வழக்கமாக புத்தாண்டு பிறக்கும். கொரோனா பெருந்தொற்றால், கட்டுப்பாடுகளும், பாதுகாப்பும் நிறைந்து புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். ஆம், நாம் இப்போது 2021-ம் ஆண்டில் இருக்கிறோம்.
2020 ஆம் ஆண்டின் பெரும்பகுதி கொரோனா, ஊரடங்கு, முகக்கவசம், என்று சுருங்கி இந்த நிமிடத்தோடு கடந்துவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி என்ற ஆயுதத்தோடு 2021 ஆம் ஆண்டை வரவேற்போம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதுபோல், இனி உலக மக்கள் நலமோடும், வளமோடும் வாழ நல்வழி பிறக்கட்டும் . அன்பும், மகிழ்ச்சியும் பெருகட்டும்.
வாசகர்கள் அனைவருக்கும் நியூஸ்18 தமிழ் இணையதளம் சார்பாக 2021 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: New Year 2021