முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Happy New Year 2021 | அறிவுரையுடன் புத்தாண்டு கேக்: அசத்திய காவல்துறையினர்!

Happy New Year 2021 | அறிவுரையுடன் புத்தாண்டு கேக்: அசத்திய காவல்துறையினர்!

புத்தாண்டு கேக்

புத்தாண்டு கேக்

புத்தாண்டை கொண்டாட வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களை அழைத்து அறிவுரை கூறி, அவர்களின் கையாலோய கேக் வெட்டி கொண்டாடினர் சேலையூர் காவல்துறையினர்.

  • Last Updated :

காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கு எடுத்துக்காட்டாக, புத்தாண்டை கொண்டாட வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களை அழைத்து அறிவுரை கூறி, அவர்களின் கையாலேயே கேக் வெட்டி கொண்டாடினர் சென்னை சேலையூர் காவல்துறையினர்.

கொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் பொது இடங்களிலும் மதுபான விடுதி, சொகுசு விடுதிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் கூட கூடாது. சாலைகளில் வாகனங்களை வைத்துக்கொண்டு சாகசம் செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், இதற்காக சென்னையில் 300 இடங்களில் போலீசார் வாகன தணிக்கை செய்வார்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், பிரதான சாலைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும், போலீசாரின் தடையை மீறி பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நோய்த்தொற்று ஏற்படும் வகையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், சென்னை கிழக்கு தாம்பரத்தில் சேலையூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புத்தாண்டை கொண்டாட சில இளைஞர்கள் வாகனத்தில் சுற்றி திரிந்தனர். அவர்களை அழைத்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சாகசங்களில் ஈடுபட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்தும் சேலையூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிலையில், புத்தாண்டு நேரம் ஆரம்பித்தவுடன் அந்த இளைஞர்களை அழைத்து, அவர்களையே கேக் வெட்ட செய்து, காவல் துறை உங்கள் நண்பன் என்ற சொல்லுக்கு எடுத்து காட்டாக, புத்தாண்டை அவர்களுடன் கொண்டாடினர். பின்னர், அந்த இளைஞர்களிடம் உங்கள் உயிர் எப்படி உங்கள் குடும்பத்தினருக்கு முக்கியமோ, அப்படித்தான் உயிர் போகாமல் தடுக்க வேண்டியது எங்கள் கடமை என்றும் அறிவுரை கூறிய போலீசார், இளைஞர்களை வீட்டிற்கு பத்திரமான அனுப்பி வைத்தனர்.

top videos
    First published:

    Tags: New Year 2021, Police