Home /News /tamil-nadu /

Happy Mother's Day : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

Happy Mother's Day : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஓபிஎஸ், ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவரகள் பலர் அன்னையர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

    உலகின் பொதுவான ஒரு விஷயம் என்றால் தாயின் அன்பு மட்டும்தான். பாலூட்டும் உயிரினம் தொடங்கி மனித உயிர்கள் அனைத்திற்கும் அன்னையே முதல் ஆதாரம். இப்படி வாழ்நாளை மற்றவர்களுக்காக அர்பணிக்கும் அவர்களுக்கு நன்றி கூறும் நாள்தான் அன்னையர் தினம். இன்று பலரும் அவரவர் அன்னையருக்கு நன்றி கூறி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் அரசியல் பிரமுகர்களும் தங்களின் தாயை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    துணை முதலமைச்சரான ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தாய்மையைப் போற்றியும், முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவை போற்றியும் அன்னையர் தின வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.

    அதில் அன்னையர்களை தன்னலம் பாராது மற்றவர்களின் நலனில் அக்கறை செலுத்துவோர் அன்னையர்தான் என பதிவிட்டுள்ளார்.



    பின் ஜெயலலிதாவை மக்களால் நான் மக்களுக்காகவே நான் என தன்னலம் கருதாமல் தாயுள்ளத்தோடு மக்களுக்காக வாழ்க்கையை அர்பணித்த புரட்சித்தலைவி அம்மாவைப் போற்றி வணங்குகிறேன் என கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    ஸ்டாலினுன் தன் அன்னையிடம் ஆசிர்வாதம் பெற்ற புகைப்படத்தைப் பகிர்ந்ததோடு “ இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது! “ எனக் கூறி அன்னையர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.



    அவரைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் அவருடைய அம்மாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து அம்மாக்களின் சிறப்பை பதிவு செய்துள்ளார்.



    பாமக தலைவர் ராமதாஸ் ட்விட்டரில் தன்னலமில்லாதவர்கள், அன்பு , கனிவு, அக்கறைகளை கொண்டவர்கள் அன்னையர்கள் என சிறப்பித்து வாழ்த்து கூறியுள்ளார்.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Mothers day

    அடுத்த செய்தி