தினமும் 200 வீடுகள்: சளைக்காமல் 5 மணி நேர அலைச்சல் - கொரோனா பணியில் அசத்தும் மாற்றுத்திறனாளி

சென்னையில் கொரோனா பணியில் மாற்றுத்திறனாளி சாந்தி முன்நின்று சாதித்துவருகிறார்.

தினமும் 200 வீடுகள்: சளைக்காமல் 5 மணி நேர அலைச்சல் - கொரோனா பணியில் அசத்தும் மாற்றுத்திறனாளி
சென்னையில் கொரோனா பணியில் மாற்றுத்திறனாளி சாந்தி முன்நின்று சாதித்துவருகிறார்.
  • Share this:
தமிழகத்தில் சென்னை தான் கொரோனோவின் ஹாட் ஸ்பார்ட்டாக இருந்துவருகிறது. தமிழக அரசு சென்னையில் கொரோனோ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், மக்களின் அச்சத்தைப் போக்கவும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமித்தது.

இந்த கொரோனோ தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் தான் மாற்றுத்திறனாளி சாந்தி.


டெய்லர் வேலையில் கைதேர்ந்த சாந்தி கொரோனோ கால ஆரம்பத்தில் மாஸ்க் தைக்கும் பணியில் இருந்துள்ளார். தனியார் தன்னார்வல அமைப்பில் பணியாற்றி வரும் சாந்திக்கு வீடு வீடாக சென்று பணி மேற்கொள்ளும் வாய்ப்பு தேடி வர அதையும் ஏற்றுக்கொண்டு சேவையில் களமிறங்கியுள்ளார்.

மக்கள் வெளியிலேயே நடமாட அச்சம் கொள்ளும் இந்த சூழ்நிலையில் தன்நிலையை பொருட்படுத்தாமல் மக்களின் அச்சத்தை போக்க தினமும் 5 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றி வருகிறார்.

கொரோனோ வாரியர்ஸான  சாந்தி கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரத்தில் தினமும் 200 வீடுகளுக்கும் மேல் தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனோ அறிகுறி பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். மேலும்  வீட்டில் உள்ள உறுப்பினர்களிடம் கனிவாக பேசி கொரோனோ அறிகுறி உள்ளதா என கேட்டறிந்து அவர்களின் அச்சத்தையையும் போக்கி வருகிறார்.மாடிவீடுகளுக்கு செல்லும் போது சிரமங்கள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சேவையாற்றிவருகிறார் சாந்தி. தினமும் பார்த்தவர்களிடமே மீண்டும் மீண்டும் கொரோனோ அறிகுறி தொடர்பாக கேள்வி கேட்கும் போது சிலர் எரிச்சல் அடைவதாகவும் அதை பொருட்படுத்தாமல் அவர்களிடம் நல்லுறவு மேற்கொண்டு அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வருவதாகவும் கூறுகிறார் சாந்தி.

சென்னையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனோ தொற்று பரவி வரும் சூழ்நிலையில் தற்பொழுது பரவல் பாதியாக குறைந்துள்ளது. இதற்கு சாந்தியைப் போன்றோர்களின் பங்களிப்பு மிகமுக்கியமானது.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading