மகளின் திருமணத்துக்காக பழைய 500,1000 நோட்டுகளாக ரூ.35,000 சேமித்துவைப்பு - பரிதவிக்கும் மாற்றுத்திறனாளி பெண்

மாதிரிப் படம்
- News18 Tamil
- Last Updated: July 12, 2020, 9:09 PM IST
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், தனது மகளின் திருமணத்திற்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக 35 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்த சோகம் சீர்காழி அருகே நடந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. வீடு கட்டுமான பணிக்காக இவர் வீட்டின் கொள்ளைபுறத்தை தோண்டியபோது, பிளாஸ்டிக் கவரில், மண்ணில் புதைக்கப்பட்டு பழயை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக 35,500 ரூபாய் இருந்துள்ளது. அந்த பணத்தை, ராஜாதுரைக்கு தெரியாமல் சேர்த்து வைத்திருப்பதாக அவரது மனைவி உஷா கூறியுள்ளார். அதனை அடுத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 4 ஆண்டுகளுக்கு முன்பே செல்லாமல் போனதாக கட்டிட தொழிலாளர்கள் கூறியதை கேட்டு, வாயடைத்து நின்றுள்ளார் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான உஷா.
தேசிய ஊரக திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து சிறுக சிறுக இந்த பணத்தை சேர்த்துள்ளார் உஷா. காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான உஷா, அவரது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை மாற்றிக்கொடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.