ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஹால்மார்க் முத்திரை கோல்மால்.. தமிழகம் முழுவதும் பரவி கிடக்கும் மோசடி கும்பல்

ஹால்மார்க் முத்திரை கோல்மால்.. தமிழகம் முழுவதும் பரவி கிடக்கும் மோசடி கும்பல்

போலி ஹால்மார்க் முத்திரை பதித்து மோசடி செய்து வரும் கும்பல்

போலி ஹால்மார்க் முத்திரை பதித்து மோசடி செய்து வரும் கும்பல்

ஆதார் கார்டு கொடுத்தால் சிக்கிக் கொள்வோம் என்பதால் போலி பான் கார்டை மட்டும் கொடுத்து நகைகளை அடகு வைத்துள்ளனர்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகம் முழுவதும் ஹால்மார்க் தங்க நகைகளை போன்று போலி முத்திரைகளை பதித்து தங்க நகைகளை அடகு வைத்து பணம் பறித்து வந்த கும்பலில் ஒருவர் ஆம்பூரில் சிக்கியுள்ளார். 

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மூங்கில் மண்டி தெருவில் உள்ள சபரி என்ற அடகுக் கடைக்கு கடந்த 7ம் தேதி இரவு 8 மணிக்கு புர்கா அணிந்த இரு பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்து கருமணி ஆரம் ஒன்றை கொடுத்து விட்டு அதற்கு 1,20,000 ரூபாய் பணம் கேட்டுள்ளனர்.

  இரு தரப்பினரும் பேரம் பேசி ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பெற்றுச் சென்றுள்ளனர் அந்த பெண்கள்.தொடர்ந்து ஷாரப் பஜார் பகுதிக்குச் சென்ற பொண்கள் ஆம்பூர் நகைக்கடை உரிமையாளர் சங்கத் தலைவர் கிஷன்லால் என்பவரின் கடைக்குச் சென்று கைவரிசை காட்டியுள்ளனர்.

  ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட 2 வளையல்களை கொடுத்து 1,40,000 ஆயிரம் ரூபாய் பெற்றுச் சென்றுள்ளனர். இதே கும்பல் கடந்த 10ம் தேதி திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட போலி நெக்லஸ்களைக் கொடுத்து 2 கடைகளில் 2 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி பெற்றுச் சென்றுள்ளனர். இதனால் உஷாரான அடகுக்கடை ஊழியர்கள், மோசடி பேர்வழிகள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

  இந்நிலையில் கடந்த 13ம் தேதி புர்கா அணிந்த பெண்ணுடன் ஆண் ஒருவரும் இணைந்து ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா என்ற அடகுக்கடைக்கு சென்றுள்ளனர். உஷாரான கடை உரிமையாளர் கிரண் என்பவர் அது போலி நகை என்பதை கண்டுபிடித்து உடனடியாக இருவரையும் பிடிக்க முயன்றுள்ளார்.

  இதையும் படிங்க: காதலியை பெண் கேட்டதால் பெண்ணின் தந்தை தாக்குதல்... சோகத்தில் இளைஞர் தற்கொலை - திருவண்ணாமலையில் பரபரப்பு

  சுதாரித்துக் கொண்ட பெண் உடனடியாக கடையிலிருந்து வெளியேறி தப்பிச் சென்றார். ஆனால் அவருடன் வந்த ஆண் நண்பர் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரிடம் விசாரணையைத் தொடங்கிய போது தனது செல்போனில் உடனடியாக பார்வேர்டை மாற்ற முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை கடைக்குள் வைத்து அடித்து உதைத்தனர்.

  அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல வெளியானது. பிடிபட்டவர் பெங்களூருவைச் சேர்ந்த 29 வயதான சையத்த தவ்ஹீத் பாஷா என்பதும் அவருடன் வந்த பெண்ணின் பெயர் சிம்ரன் என்பதும் தெரியவந்தது. விசாரணையில் பெங்களூருவைச் சேர்ந்த நசீர் என்பவர் இதுபோன்ற போலி நகைகளை ஹால்மார்க் முத்திரையிட்டு விற்பனை செய்ய கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

  இதையும் படிங்க: வெளிநாட்டில் இருந்து கொண்டு பெண்களின் ஆபாச படங்களை பரப்பிய காசியின் நண்பர் அதிரடி கைது!

  ஒரு லட்சம் ரூபாய்க்கு நகைகளை விற்பனை செய்தால் அதில் 75 ஆயிரம் ரூபாயை நசீருக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவர்களைப் போல் 10க்கும் மேற்பட்ட குழுக்கள் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பல் ஆதார் கார்டு கொடுத்தால் சிக்கிக் கொள்வோம் என்பதால் போலி பான் கார்டை மட்டும் கொடுத்து நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்த மோசடிக் கும்பலைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள சிமரன் என்ற பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Crime News, Fraud, Vellore