• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஹஜ் பயணம் செல்வோருக்கான விமானங்களை சென்னையில் இருந்து இயக்கவேண்டும்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..

ஹஜ் பயணம் செல்வோருக்கான விமானங்களை சென்னையில் இருந்து இயக்கவேண்டும்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஹஜ் யாத்ரிகர்களுக்கு சென்னையில் இருந்து விமானங்களை இயக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Share this:
    ஹஜ் பயணம் செல்வோருக்கான விமானங்களை சென்னையில் இருந்து இயக்கவேண்டும் என அனுமதிகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவால் நாட்டின் 10 இடங்களில் இருந்து மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பரவலால், நாட்டின் 10 இடங்களில் இருந்து மட்டுமே ஹஜ் புனித பயணத்துக்கு விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும், அதில் சென்னை இடம்பெறாததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தமிழ்நாடு மற்றும் அதன் அண்டை மாநிலங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 4, 500 யாத்ரிகர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதாக குறிப்பிட்ட முதல்வர், இந்த ஆண்டு கேரள மாநிலத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

    மேலும் படிக்க...சென்னையில் செய்தி வாசிப்பாளர் பணி போலி விளம்பரம்.. பெண் மோசடி கும்பலிடம் சிக்கியது எப்படி?



    முதிய யாத்ரீகர்கள் அதிகம் இருப்பதால், சவுதி அரேபியாவிலுள்ள ஜெட்டாவுக்கு சென்னையிலிருந்து விமானங்களை இயக்கினால் உதவிகரமாக இருக்கும் என்றும் தமிழக அரசு இந்த பயணிகள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும்போது பாதுகாப்பாக அனுப்பும் வகையில் அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் எனவும்  முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: