• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAA & NRC குறித்து ரஜினிகாந்துடன் இந்திய ஹஜ் கூட்டமைப்பின் தலைவர் அபுபக்கர் ஆலோசனை

CAA & NRC குறித்து ரஜினிகாந்துடன் இந்திய ஹஜ் கூட்டமைப்பின் தலைவர் அபுபக்கர் ஆலோசனை

  • News18
  • Last Updated :
  • Share this:
குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து ரஜினிகாந்துடன் இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை இந்தியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகளை தூண்டி விடுவதாக நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பேசி வருகிறார்.

இதனடிப்படையில் இஸ்லாமிய அமைப்புகள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு கூடிய பாதிப்புகள் பற்றி ரஜினிகாந்திற்கு விளக்கம் தேவை, அதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நேரில் சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.

குடியுரிமை சட்டத்தின் மூலமாக இங்கு இஸ்லாமியர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பது குறித்தும் இதனால் பாதிப்புகள் எந்த மாதிரி ஏற்படும் என்பது குறித்தும் ரஜினிகாந்த் அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளையில் குடியுரிமை சட்ட திருத்தத்தால் பாதிப்புகள் ஏற்படாது என்ற விளக்கத்தையும் ரஜினிகாந்த் பகிர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: