Home /News /tamil-nadu /

வால்பாறை : யானை - மனித மோதல்களை தடுக்கும் பணிக்காக ஹெச்.சி.எல் அறக்கட்டளை சார்பாக ஊக்கத்தொகை

வால்பாறை : யானை - மனித மோதல்களை தடுக்கும் பணிக்காக ஹெச்.சி.எல் அறக்கட்டளை சார்பாக ஊக்கத்தொகை

Valparai

Valparai

Habitats அறக்கட்டளையின் நிதி உதவியை பெறுவதற்காக 4,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 10 விண்னப்பங்கள் இறுதி செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டு அவற்றில் 4 அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ராவை நிறுவனராகக் கொண்டு உருவாக்கப்பட்டது Habitats அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்லுயிர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சூழலியல் தன்னார்வ அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிற்கு ஊக்கத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. சூழல் பாதுகாப்பை மேற்கொண்டு வரும் தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், என்.ஜி.ஓக்கள் தொடர்ந்து தங்களது பணியை ஆற்றும் வகையில் இந்த  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ்,  வால்பாறை  பகுதியில் யானைகள் - மனித மோதல்களை தொழில்நுட்ப உதவியுடன் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் Nature Conservation Foundation என்ற அமைப்புக்கு Habitats அறக்கட்டளை சார்பில் 35 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    வால்பாறை பகுதியில் 70 ஆயிரம் மக்கள் வசிப்பதுடன், 120 யானைகளில் வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. இங்கு மனிதர்கள்-யானை மோதல்கள் என்பது மிகவும் சிக்கலான பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு நேச்சர் வனப் பாதுகாப்பு அறக்கட்டளையானது மிகவும் எளிமையான, தனித்துவத்துவமான மொபைல் போன் வழியிலான எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்தும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மனிதர்கள் மற்றும் யானைகள் மோதலைத் தடுக்க விழிப்புணர்வு செயல் திட்டங்களையும் தொழில்நுட்பத்தில் இணைத்துச் செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    Read more: இப்படி பேச கங்குலிக்கு உரிமையே இல்ல - கோலி கேப்டன்சி விவகாரத்தில் சீறும் வெங்சர்கர்

    இதுகுறித்து, Habitats அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் ரோஷினி நாடார் மல்கோத்ரா கூறியது:-
    “பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பருவநிலை மாறுபாடு ஆகியவை ஒற்றுக்கொன்று தொடர்பு கொண்டவை என்ற கருத்தை Glasgow-ல் அண்மையில் நடைபெற்ற சூழலியல் மாநாட்டில் உலகத் தலைவர்கள் அங்கீகரித்துள்ளனர்.

    வனவிலங்குகள் கடத்தல், சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனங்களுக்கு போதுமான நிதியுதவிகள் கிடைக்காமல் இருப்பது போன்ற சவாலான நிலைகளுக்கு இடையே சூழலியல் ஆர்வலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சூழலியல் அமைப்புகள், அரிய வகை உயிரினங்கள் ஆகியவற்றைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அமைப்புகள், தன்னார்வர்களின் பணிகளை போற்றும் வகையில் Habitats அறக்கட்டளை  நிதி அளித்து வருகிறது. எங்கள் அமைப்பானது தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களுக்கு மானியங்களை அளிப்பதுடன் மட்டும் இல்லாமல் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்றார்.

    Read more:   பழங்குடியினரை மதமாற்ற முயற்சி செய்ததாக 4 மதபோதகர்கள் கைது

    Habitats அறக்கட்டளையின் நிதி உதவியை பெறுவதற்காக 4,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 10 விண்னப்பங்கள் இறுதி செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டு அவற்றில் 4 அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

    Habitats அறக்கட்டளையின் நிதி உதவியை பெற்ற இதர அமைப்புகளும் அவற்றின் பணிகளும்..

    1. வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு Habitats மானியம்: ரூ.30 லட்சம்: பாம்பே சுற்றுச்சூழல் ஆக்ஷன் குரூப்: மகாராஷ்டிரத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துகிறது.

    Read more: 12 குடும்ப ஓட்டுகள் இருந்தும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற வேட்பாளர் - வாக்கு எண்ணும் மையத்தில் கதறி அழுதார்...

    2. சமுதாயம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அசோசியேஷன்: ரூ.25 லட்சம்: உயிரினங்கள் அழியாமல் காத்து அவைகளுக்கான அச்சுறுத்தல்களை அறிந்து அதிலிருந்து காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    3. சூழல் பாதுகாப்பு ஹூரோ விருது: ரூ.15 லட்சம்: அயுஷி ஜெயின்: நன்னீரில் வாழக் கூடிய ஆமைகளைக் காத்திடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடத்தல், வாழ்விட அழிப்பு போன்ற காரணங்களால் அந்த உயிரினம் அழியும் நிலையில் இருந்து வருகிறது. இதைக் காக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார்
    Published by:Arun
    First published:

    Tags: Nature Beauty, Wild Animal

    அடுத்த செய்தி