Home /News /tamil-nadu /

காத்திரு பகையே... தி.மு.கவுக்கு எச்சரிக்கைவிடுக்கும் ஹெச்.ராஜா

காத்திரு பகையே... தி.மு.கவுக்கு எச்சரிக்கைவிடுக்கும் ஹெச்.ராஜா

கோப்புப் படம்

கோப்புப் படம்

தி.மு.கவை விமர்சித்து ஹெச்.ராஜா பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் காத்திரு பகையே என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் நேற்று நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. தமிழகம் முழுவதும் பெரும்பாலும் அமைதியான முறையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. நாளை 5 வார்டுகளிள்ள 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையில காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. மறுபுறம், அ.தி.மு.க தனித்து போட்டியிட்டது. பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து களம் கண்டன. சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொண்ட அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இந்த உள்ளாட்சித் தேர்தலில் பிளவு பெற்றது.

    உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ஹெச்.ராஜா தீவிரமாக தி.மு.கவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பெருகிய வெள்ளமும்’ ‘உருகிய வெல்லமும்’, ‘கருகிய கால் கொலுசும்’, "பல்லிக்குப் பாடை கட்டிய புளியும்", "குறுமிளகு என்று சொல்லிக் கொடுத்த பப்பாளி விதைகளும்", "மிளகாய் பொடியென்று மக்கள் தலையில் அரைத்துக் கொடுத்த கோலப் பொடியும்’, "அணில் கடித்ததால் ஏற்பட்ட மின்சார வெட்டும்’, "தில்லு முல்லு கழகத்தின் கதைமுடிக்கக் கங்கணம் கட்டிக் காத்திருக்கின்றன... ‘காத்திரு பகையே’ என்று காட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: BJP, HRaja, Local Body Election 2022

    அடுத்த செய்தி