• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தின் அமைதியைக் குலைக்க நினைக்கும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் - டி.கே. ரங்கராஜன் எம்பி

தமிழகத்தின் அமைதியைக் குலைக்க நினைக்கும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் - டி.கே. ரங்கராஜன் எம்பி

  • Share this:
    வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி, பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யுமாறு மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.

    கடந்த செவ்வாய் கிழமை அன்று எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ”கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புகளையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட வேண்டும்.” என்று பதிவிட்டிருந்தார்.

    மாநிலங்களவை உறுப்பினரும் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ”டெல்லியில் நடக்கும் வெறியாட்டம் போல தமிழ்நாட்டிலும் நடப்பதற்குத் தூண்டும் விதமாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி வருகிறார். தமிழகத்தின் அமைதியைக் குலைக்க நினைக்கும் எச்.ராஜாவை தமிழக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், ”தமிழகத்தின் கபில் மிஸ்ரா எச் ராஜா. டெல்லி பயங்கரவாதத்தைக் கவனத்தில் கொண்டு எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் தயங்குவது ஏன்? ராஜா மிரட்டும் ஆயுதங்கள் வந்தால் அதற்கு எடப்பாடியே பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.

    Also see:

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: