எச்.ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: திருமாவளவன்

திருமாவளவன்

 • News18
 • Last Updated :
 • Share this:
  அடுத்த 24 மணி நேரத்தில் எச்.ராஜாவை கைது செய்யவில்லை எனில், காவல்துறை மீது எச்.ராஜா வைத்த விமர்சனம் உண்மை என்பது போல் ஆகிவிடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

  சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தந்தை பெரியாரருக்கு எதிராகவும், தலித் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்கு போராடியவர்களை தொடர்ந்து அவதூறாக எச்.ராஜா பேசி வருகிறார். அநாகரிகமாக, கோபமாக, அறுவறுக்கத்தக்க நிலையில் அவரது பேச்சு உள்ளது.

  மேலும் தமிழக அரசு கையாளாகாத அரசு என்பதை எச்.ராஜா பேச்சில் வெளிப்படுத்துகிறார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டம் அல்லது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். எச்.ராஜா தூண்டுதலின் பெயரில்தான் மர்ம நபர் ஒருவர், பெரியார் படத்தின் மீது செருப்பு எறிந்துள்ளார். அவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை வேண்டும்.

  மத்திய அரசை பார்த்து, மாநில அரசு அச்சப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் எச்.ராஜாவை கைது செய்யவில்லை எனில், காவல்துறை மீது எச்.ராஜா வைத்த விமர்சனம் உண்மை என்பது போல் ஆகிவிடும் என கூறினார்.

  Published by:Vaijayanthi S
  First published: