நீட் விவகாரம்: இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் - ஹெச் ராஜா

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தார் சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச் ராஜா

news18
Updated: April 14, 2019, 12:21 PM IST
நீட் விவகாரம்: இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் - ஹெச் ராஜா
ராஜா
news18
Updated: April 14, 2019, 12:21 PM IST
நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என ஹெச் ராஜா கூறியுள்ளார்.

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தார் சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச் ராஜா.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘பட்டியல் சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக எந்தவித ஏற்றத் தாழ்வும் இன்றி அனைத்து சமுதாய மக்களும் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.பல ஆண்டு காலமாக எங்கெல்லாம் பட்டியல் சமுதாய மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். சிவகங்கை பாராளுமன்ற தொகுதி முழுவதும் பட்டியல் சமுதாய மக்கள் அன்போடு பழகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.


மேலும் காங்கிரஸ் கட்சி நீட் விஷயத்தில் இரட்டை வேஷம் போடுகின்றது. நீதிமன்ற தீர்ப்பு என்பது எந்த விஷயத்திலும் நம்மால் மீற முடியாது. பியூஸ் கோயல் நீட் தேர்வு பற்றி கூறியிருப்பது நீதிமன்றத்தின் கருத்து என்று பேசியுள்ளார்.

இதேபோல் ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நான் பேசுவதெல்லாம் ஆதாரத்தின் அடிப்படையில், ஆனால் ப. சிதம்பரம் எப்பொழுதுமே பொய்யுரைப்பவர். மோடி பிரதமராக வந்தால் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தி விடுவார் என்று பொய் பரப்பிய ப.சிதம்பரம் குடும்பத்துடன் மன்னிப்பு கேட்க வேண்டும். நீதிமன்றத்தில் 18 முறை முன்ஜாமீன் கேட்டு வருபவர் எந்த முகத்தோடு வாக்கு கேட்டு வருகிறார் என்பதை மக்களிடம் சொல்லத்தான் வேண்டும் என்று பேசியுள்ளார்.

Also watch

Loading...

First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...