Home /News /tamil-nadu /

‘மதமாற்ற தடை சட்டம் வேண்டும்... காந்தியே மதமாற்றம் தடை குறித்து பேசியுள்ளார்’ - ஹெச்.ராஜா

‘மதமாற்ற தடை சட்டம் வேண்டும்... காந்தியே மதமாற்றம் தடை குறித்து பேசியுள்ளார்’ - ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

H Raja : அரியலூர் மாணவியை ‘கிறிஸ்தவ மதம் மாறினால் இலவச கல்வி, கன்னியாஸ்திரி ஆக்குவோம் என்று கூறி நெருக்கடி தந்துள்ளனர். அந்த சிறுமியை அறைகள், கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி கஷ்டப்படுத்தியுள்ளனர்’ என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

    மதமாற்றத்திற்கு எதிராக பாஜக ஆதரவுடன் இந்து அமைப்புகள் மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்துவோம், கிறிஸ்தவ பள்ளிகள் மதமாற்ற கேந்திரமாக மாறிவிட்டன என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

    பாஜகவின் தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில மையக் குழுக் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. மையக் குழு உறுப்பினர்களான ஹெச். ராஜா, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் , வி.பி.துரைசாமி, சி.பி.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 11 பேர் பங்கேற்றனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, மாநில நிர்வாகிகள் மாற்றம், அரியலூர் சிறுமி மரணம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்ப்ப்பட்டன. நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, “தமிழ்நாட்டில் சில பிரச்சனைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

    அரியலூர் வடுகபாளையம் சிறுமி மதமாற்றத்திற்காக 2 ஆண்டுகள் முன்பு பள்ளி நிர்வாகத்தால் நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மதமாற்ற நெருக்கடி கொடுக்கப்பட்ட 10ஆம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்றதும் ஒரு காரணம். கிறிஸ்தவ மதம் மாறினால் இலவச கல்வி, கன்னியாஸ்திரி ஆக்குவோம் என்று கூறி நெருக்கடி தந்துள்ளனர். அந்த சிறுமியை அறைகள், கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி கஷ்டப்படுத்தியுள்ளனர்.

    நீதிபதி வாக்குமூலம் பெற்ற ஆடியோ ஏன் வெளியிடப்படவில்லை. தஞ்சை காவல் கண்காணிப்பாளர், குழு அமைத்து ஒரு வாரத்தில் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதாக கூறியதுடன் சிறுமி மரணத்தில் மதமாற்றப் பிரச்சனை இல்லை என்றும் கூறியுள்ளார், இது தவறு. அவர், பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

    காஞ்சிபுரம் ஆண்டர்சன் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு திருநீரு, ருத்திராட்சம் அணிந்ததை ரவுடி போல இருப்பதாக கூறி இரண்டு மாணவர்களை அவமதித்துள்ளார் பள்ளி ஆசிரியர். அனிதாவுக்காக கூச்சல் போட்டோர் இப்போது எங்கே உள்ளனர். கிறிஸ்தவ பள்ளிகள் மதமாற்ற கேந்திரமாக மாறி விட்டது, மதமாற்ற தடை சட்டம் வேண்டும். காந்தியே மதமாற்றம் தடை குறித்து பேசியுள்ளார். மதமாற்றத்திற்கு எதிராக பாஜக ஆதரவுடன் இந்து அமைப்புகள், மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்துவோம் .

    மதுரையில் 150 ஆண்டுகள் பழைமையான முனீஸ்வர் கோயில் இடிக்கப்பட்டுள்ளது. சட்டம் பயின்றவர்கள்தான் அமைச்சர்களாக உள்ளனரா என சந்தேகமாக உள்ளது. பட்டா இடத்தில் இருக்கும் கோயில்களும் இடிக்கப்படுகின்றன. மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் பல இந்துக் கோயில்கள் இடிக்கப்படுகின்றன.

    Read More : பிலிப்பைன்ஸில் உயிரிழந்த மருத்துவ மாணவர் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டுவரப்பட்டது

    2 சதவீத வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சி அமைத்தது , திமுகவிற்கு மமதை வேண்டாம். பொங்கல் பரிசில் மிளகுக்கு பதிலாக இலவம் பஞ்சு, பப்பாளி விதைகள் இருந்திருக்கிறது. நல்ல வேளை எலி புளுக்கை இல்லை. உச்சி முதல் பாதம் வரை ஊழல் கட்சி திமுக. கொலை வெறியோடு செயல்படுகிறது ஸ்டாலின் அரசு, திருத்தணி நந்தன் மகன் குப்புசாமி தற்கொலை அதைத்தான் காட்டுகிறது. சக்கரபாணி மேல் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் அரசாக இருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் கலப்படமே இல்லை என அமைச்சர் சொல்கிறார், முதல்வர் தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.

    Read More : தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடக்கவில்லையென முதல்வரால் கூற முடியுமா? - குஷ்பு சவால்

    கிறிஸ்தவ மதமாற்றத்தில் இருந்து உயிர் தப்பிய பல பெண்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஸ்டாலின் ஆட்சியில் இந்துக்கள் மிரட்டப்படுகின்றனர். பிரின்ஸ் கஜேந்திரபாபு தூண்டுதலால் அனிதா மரணம் அரசியலாக்கப்பட்டு போராட்டம் நடந்தது.

    Must Read : அரியலூர் மாணவிக்காக நீதி கேட்டு பாஜகவினர் ட்வீட்... தேசிய அளவில் ட்ரெண்ட்..

    மணப்பாறையில் ஆழ்துளை யில் விழுந்து இறந்த குழந்தை (சுஜித்) கிறிஸ்தவ குழந்தை என்பதால் பணம் கொடுத்தனர், அரியலூர் குழந்தை இந்து என்பதால் யாரும் ஏதும் தரவில்லை” இவ்வாறு கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: BJP, H.raja

    அடுத்த செய்தி