• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • NEET Exam : நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு இதை மாற்ற முடியாது, மாணவர்களை ஏமாற்ற வேண்டாம் - எச்.ராஜா

NEET Exam : நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு இதை மாற்ற முடியாது, மாணவர்களை ஏமாற்ற வேண்டாம் - எச்.ராஜா

 எச்.ராஜா

எச்.ராஜா

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நல்ல ஆன்மிகவாதி, அவரை அதிகாரிகள் ஏமாற்றிவருகின்றனர் என்றார் எச்.ராஜா.

  • Share this:
    நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு, இதை மாற்ற முடியாது என்றும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறி மாணவர்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

    சிவகங்கையில் நடந்த திருமண விழா ஒன்றில் எச்.ராஜா கலந்து கொண்டார். விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக்கொள்கிறது. பல கோவில்கள் இருந்த இடத்தில் தற்போது வணிக வளாகங்கள் உள்ளன. கடந்த 7-6-2021 அன்று மதுரை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பாக 76 உத்தரவுகளை பிறப்பித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த உத்தரவுகளை 12 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தது. அதில் 31ஆவது உத்தரவாக ஒவ்வொரு மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கமிட்டி அமைத்து மாவட்டத்தில் உள்ள கோவில்கள் குறித்த முழு விவரம், அதாவது கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், கடைகள், வீடுகள் எவ்வளவு உள்ளன? அதில் எவையெல்லாம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்ற முழு விவரமும் சேகரிக்க வேண்டும். அத்துடன் கோவில் இடம் அனைத்தையும் கையகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கையால் தற்போது சிவகங்கை கவுரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 142 ஏக்கரில் 10 ஏக்கரை மீட்டுள்ளனர். மீதியுள்ள இடத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீதிமன்றங்கள் கோவில் நிலங்கள் குறித்து வழங்கிய தீர்ப்புகளை அமல்படுத்துங்கள் என்று கூறிய எச்.ராஜா, முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமியின் கல்லூரியில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன அதையும் அமைச்சர் மீட்க வேண்டும் என்றார். தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நல்ல ஆன்மிகவாதி, அவரை அதிகாரிகள் ஏமாற்றிவருகின்றனர் என்றார்.

    மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தால் மாநில அரசை ஊராட்சி என்று அழைக்கலாமா? என்று  கேள்வி எழுப்பிய எச்.ராஜா, படிப்பு, பாரம்பரியம் என தற்பெருமை பேசாமல் நிதியமைச்சர் தமிழகத்தின் நிதியை நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும், நதிநீர் பங்கீட்டில் மக்களுக்குத் துரோகம் செய்தது திமுக அரசாங்கம்தான் என்றும் கூறினார்.

    Must Read : நிதிநிலை பற்றாக்குறை விவகாரம் - புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    தொர்ந்து பேசிய எச்.ராஜா, நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பால் வந்துள்ளது. இதனால் இடஒதுக்கீடு எதுவும் பாதிக்கப்படவில்லை. 2004 ல் இருந்து 2016 வரை அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 202 பேர் தான் மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யபட்டுள்ளனர். ஆனால், சென்ற ஆண்டு 400 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு, இதை மாற்ற முடியாது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறி மாணவர்களை ஏமாற்ற வேண்டாம் என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: