• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மசூதிகளில் நமாஸ் செய்வதை தி.மு.கவினர் தமிழில் செய்யச் சொல்வார்களா? ஹெச்.ராஜா கேள்வி

மசூதிகளில் நமாஸ் செய்வதை தி.மு.கவினர் தமிழில் செய்யச் சொல்வார்களா? ஹெச்.ராஜா கேள்வி

பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா

பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா

  • Share this:
    இந்து கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த சொல்லும் திமுகவினர், திகவினர் முஸ்லிம் மசூதிகளில் நமாஸ் செய்வதை தமிழில் செய்யச் சொல்வார்களா? என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

    கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பெருந்துறை, கோவை, கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் வெளிநாட்டினர்களைக் குறைந்த கூலிக்காக வேலைக்கு வைத்துள்ளது தவறு. எந்த ஒரு தேசபக்தனும் அந்நிய நாட்டினரை இந்தியாவிற்குள் அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என கூறினார்.

    Also see...தினமும் வாழை இலையில் மதிய உணவு... அசத்தும் புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளி...!

    மேலும் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினரை தமிழக அரசு கைது செய்து அப்புறப்படுத்த வேண்டும். திமுகவை முஸ்லிம் லீக்காக மாற்றி வருகிறார் மு.க.ஸ்டாலின். திமுக தொண்டர்கள் கூட அதை விரும்பவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய உரிமையையும் பறிப்பதில்லை என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்து கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த சொல்லும் திமுகவினர் திகவினர் முஸ்லிம் மசூதிகளில் நமாஸ் செய்வதை தமிழில் செய்ய சொல்வார்களா? தமிழகத்தின் பல இடங்களில் நடைபெறும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை முஸ்லிம்கள் மட்டும் நடத்துகின்றனர் என கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: