’வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெரும் பணக்காரர்களின் தூண்டுதலால் போராட்டம் நடக்கிறது’ - எச்.ராஜா

’வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெரும் பணக்காரர்களின் தூண்டுதலால் போராட்டம் நடக்கிறது’ - எச்.ராஜா

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் பெரும் பணக்காரர்களின் தூண்டுதலால் நடக்கிறது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் பெரும் பணக்காரர்களின் தூண்டுதலால் நடக்கிறது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

 • Share this:
  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வேளாண் சட்டத்தை வாபஸ் வாங்க முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறிய சட்டங்கள் என்றார். போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை என்றும் விவசாயி இவ்வளவு நாள் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள் என்றும் கூறிய ஹெச்.ராஜா, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும் பாதுகாப்பு கிடைக்கவும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

  வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் பெரும் பணக்காரர்களின் துண்டுதலால் நடந்துவருவதாக கூறிய அவர், அதற்கு சாட்சியாக பாதாம், பிஸ்தா, வாசிங்மிஷின், மசாஜ் சென்டர் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று விமர்சித்தார். மேலும் கூறுகையில், யார் விவசாயம் செய்யவில்லையோ அவர்கள்தான் போராட்டம் செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளின் பண பலத்தின் பின்னால் போலியான போராட்டம் நடைபெற்று வருகிறது என்று எச்.ராஜா கூறினார்.

  Also read: மினி கிளினிக்குகளில் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் - அரசு மருத்துவர்கள் கோரிக்கை

  சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், சட்டத்தை வாபஸ் வாங்க முடியாது என்றும் தெரிவித்த அவர், எஸ்.ரா.சற்குணம் பிரதமரை அவதூறாக பேசியதாகவும் அவரை நிரந்தரமாக குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டும் எனவும் காட்டமாக தெரிவித்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: