மாட்டுக்கு வைக்கோல்.. டிராக்டர் பயணம்: ஹெச்.ராஜாவின் விவசாயி அவதாரம் - வைரலாகும் பிரச்சார வீடியோ

ஹெச்.ராஜா

கடவுள் எனும் முதலாளி.. கண்டெடுத்த தொழிலாளி விவசாயி.. விவசாயி எனும் பாடலை பயன்படுத்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளா காரைக்குடி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா.

  • Share this:
    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வாக்காளர்களைக் கவர்ந்துவருகின்றனர். சென்னை வேளச்சேரி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் அசோக், ‘வாக்கு சேகரிக்கும்போது பரோட்டா கடையில் பரோட்டா போட்டு ஊழியர்களிடம் வாக்கு சேகரித்தார். நாகப்பட்டினம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தங்க கதிரவன், ‘துணி துவைத்து வாக்கு சேகரித்தார். ஆயிரம்விளக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பு, ‘டீ போட்டு வாக்கு சேகரித்தார். விருகம்பாக்கத்தில் தி.மு.க வேட்பாளர் பிரபாகர ராஜா, ‘ஹோட்டலில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார். கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் ஆட்டோவில் சென்றார், காலையில் வாக்கிங் சென்றார், சிலம்பம் சுற்றிக் காண்பித்தார். இப்படி, வித்தியாச வித்தியாசமாக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்துவருகின்றனர்.

    இந்தத் தேர்தலில் விவசாயி என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிகமான முறை விவசாயி என்ற வார்த்தையை பயன்படுத்திவருகிறார். இந்தநிலையில், காரைக்குடி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவும் தன்னை விவசாயியாக முன்னிறுத்தி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.


    அந்த வீடியோவில், ‘கடவுள் எனும் முதலாளி.. கண்டெடுத்த தொழிலாளி விவசாயி எனும் எம்.ஜி.ஆரின் பாடலை பின்னே ஒலிக்கவிட்டு ஹெச்.ராஜா மாட்டுக்கு வைக்கோல் வைப்பது, டிராக்டர் ஓட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ, இணையத்தில் நெட்டீசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: